சுடச்சுட

  

  கருப்புப் பணம் வைத்திருப்போர் மோடி ஆட்சியில் கவலையில்லாமல் உள்ளனர்: முன்னாள் எம்எல்ஏ கே.பாலகிருஷ்ணன்

  By நெய்வேலி,  |   Published on : 21st December 2016 08:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில், கருப்புப் பணம் வைத்திருப்போர் கவலை இல்லாமல் உள்ளனர் என முன்னாள் எம்எல்ஏ கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
   வங்கிகள் மூலமாகவும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, எல்ஐசி மூலமாகவும் பெறப்படும் கடன்களை முழுமையாக ரொக்கமாக வழங்கிட வேண்டும், வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.24 ஆயிரம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நெய்வேலியில் மெயின் பஜார், காமராஜர் சிலை அருகே திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகரச் செயலர் திருஅரசு தலைமை வகித்தார்.
   ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ கே.பாலகிருஷ்ணன் ஆற்றிய சிறப்புரை:
   2012-ஆம் ஆண்டில் கருப்புப் பணம் ஒழிப்புக் கமிட்டி, பணமதிப்பு நீக்கம் மூலம் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியாது என பரிந்துரை செய்தது. அந்தக் கமிட்டியில், பாஜகவினரும் உறுப்பினராக இருந்தனர்.
   கருப்புப் பணம் வெளிநாடுகளில் இருந்து, அந்நிய மூலதனமாக இங்கு வருகிறது. அதற்கு அரசால் பல சலுகைகளும் வழங்கப்படுகிறது. சாதாரண மக்கள் வங்கிகளில் வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்தாலும், ஒரு நாளைக்கு ரூ.2,000 மட்டுமே கிடைக்கிறது. ஆனால், பாஜகவினர், ஒப்பந்ததாரர்கள், முதலாளிகளிடம் இருந்து புதிய ரூ.2,000 நோட்டுகளாக நூற்றுக்கணக்கான கோடிகள் பிடிபடுகின்றன.
   கருப்புப் பணக்காரர்கள் மோடி ஆட்சியில் கவலை இல்லாமல் உள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்புப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, 100 நாள்களில் மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என நரேந்திர மோடி தேர்தல் வாக்குறுதி அளித்தார்.
   அதை மறைக்கத்தான் இந்த நடவடிக்கையா என கேள்வி எழுப்பினார் கே.பாலகிருஷ்ணன். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.முத்துவேல், சிஐடியு மாவட்டப் பொருளர் ஜி.குப்புசாமி ஆகியோர் பேசினர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai