சுடச்சுட

  

  பரங்கிப்பேட்டை ஒன்றியம், ஆணையாங்குப்பம் கிராம மக்கள், வழக்குரைஞர் தி.ச.திருமார்பன் தலைமையில் திங்கள்கிழமை கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
   அந்த மனுவில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ஆணையாங்குப்பம் கிராமத்தினர் சுமார் 600 பேர் பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் வேலை செய்ததற்கான சம்பளம் வழங்கப்படாமல் இருந்தது. ஒவ்வொருவருக்கும் ரூ.5 ஆயிரம் வரை பாக்கி வைக்கப்பட்டுள்ளது.
   இதுகுறித்து பலமுறை மனு அளித்த பிறகு தொழிலாளர்களுக்கு சொற்ப தொகை வழங்கப்பட்டது. இருப்பினும், ஆகஸ்ட் மாதம் முதல் பணிபுரிந்த நாள்களுக்கான ஊதியம் முழுமையாக வழங்கப்படவில்லை. இதனால் விவசாயத் கூலித் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
   ஊராட்சிக்கு நிரந்தர மக்கள் நலப் பணியாளர் நியமிக்கப்படாததால், சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதோடு, முறைகேடும் நடைபெறவும் வாய்ப்புள்ளது. எனவே உரிய நடவடிக்கை மேற்கொண்டு கூலித் தொகையை வழங்க வேண்டுமென மனுவில் வலியுறுத்தப்பட்டது.
   கிராம வாசிகள் வி.சிவகங்கை, ப.முத்துலட்சுமி, எம்.மகேஸ்வரி, ஆர்.இந்திரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai