சுடச்சுட

  

  தீக்குளித்த பெண் சாவு: கணவர் உள்பட மூவர் மீது வழக்கு

  By கடலூர்,  |   Published on : 21st December 2016 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கம்மியம்பேட்டையில் தீக்குளித்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
   விழுப்புரம் வெங்கடேசபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் மகள் கவிதா (23). இவரும், கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் ராஜேஷ் என்பவரும் காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், ராஜேஷ் வீட்டில் எதிர்ப்பு ஏற்பட்டதை அடுத்து, கம்மியம்பேட்டையில் தனிக் குடித்தனம் நடத்தி வந்தனர்.
   இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி கவிதா உடலில் தீக்காயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
   இதையடுத்து, கவிதாவின் தாயார் லட்சுமி திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார். அதில், தனது மகளை, அவரது கணவர், கணவரின் தாயார் மற்றும் சகோதரர் ஆகியோர் வரதட்சணைக் கேட்டு கொடுமை செய்ததாகவும், அதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் கவிதா தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
   புகாரின் பேரில் போலீஸார் ராஜேஷ் உள்பட 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai