சுடச்சுட

  

  நெய்வேலியில் தொடர் திருட்டில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
   நெய்வேலி, 6-ஆவது வட்டத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. என்எல்சி பொது மருத்துவமனை செவிலியர். இவரது மகனுக்கு 24-ஆவது வட்டத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 9-ஆம் தேதி திருமணம் நடந்தது. அப்போது, மர்ம நபர் மணமகன் அறையிலிருந்து ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்றார்.
   இதேபோல், நெய்வேலி, 17-ஆவது வட்டம், தென்னாற்காடு வீதியைச் சேர்ந்தவர் பாலசேகரன். என்எல்சி ஊழியரான இவர், தனது பைக்கை வட்டம் 19-இல் உள்ள பூக்கடை அருகே நிறுத்திச் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லையாம்.
   இரு சம்பவங்கள் தொடர்பாகவும் முத்துலட்சுமி, பாலசேகரன் ஆகியோர் தனித் தனியாக அளித்த புகாரின் பேரில் நெய்வேலி நகரிய போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், காவல் உதவி ஆய்வாளர்கள் பாரதி, குமார் ஆகியோர் நெய்வேலி ஆர்ச் கேட் அருகே திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சந்தேகத்துக்குரிய வகையில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் நெய்வேலி, 21-ஆவது வட்டத்தைச் சேர்ந்த பிரபு என்ற பிரபுராஜ் (37) எனத் தெரியவந்தது. இவர், பாலசேகரனின் பைக் மற்றும் முத்துலட்சுமி வீட்டு திருமணத்தில் ரூ.50 ஆயிரம் திருடியதை ஒப்புக்கொண்டாராம்.
   அவரிடம் இருந்து பைக் மற்றும் ரொக்கம் ரூ.44 ஆயிரத்தை பறிமுதல் செய்த போலீஸார், பிரபுவை கைது செய்தனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai