சுடச்சுட

  

  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தொலைநிலைக் கல்வி இயக்கக இயற்பியல் பிரிவு சார்பில் தேசிய அளவிலான ஆய்வு ஏடு பிரசுரித்தல் குறித்த இரு நாள் பயிலரங்கு அண்மையில் நடைபெற்றது.
   நிகழ்ச்சியில், தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம் மற்றும் பீகார் மாநிலங்களிலிருந்து 85 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.
   இதில், உலகளாவிய அறிவியல் சஞ்சிகைகளில் பிரசுரிக்கும் வழிமுறைகள், நுட்பங்கள் குறித்த விரிவான தகவல்களுடன் கூடிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
   இயற்பியல் பிரிவுத் தலைவர் எஸ்.பாலமுரளிகிருஷ்ணன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் எல்.பழனியப்பன் பயிற்சிப் பட்டறையின் நோக்கம் குறித்துப் பேசினார். பயிற்சி பட்டறையை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.மணியன் தொடங்கி வைத்து, விழா மலரை வெளியிட்டார். அவர் பேசுகையில், பிரசுரித்தலின் அவசியம், அவற்றில் கல்வி நிலையங்களின் பங்களிப்பு, பிரசுரித்தல் பணிக்காக பல்கலைக்கழகங்கள் வழங்கும் நிதி மற்றும் பிற உதவிகள் குறித்துப் பேசினார்.
   தொலை நிலைக் கல்வி இயக்கக இயக்குநர் எஸ்.புகழேந்தி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசினார். கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஏ.என்.கண்ணப்பன் பிரசுரித்தலின் அவசியம், அதன்மூலம் ஆய்வாளர்கள் அடையும் பயன்கள் பற்றி எடுத்துரைத்தார். இயற்பியல் பிரிவு இணைப் பேராசிரியர் எஸ்.திருமாறன் நன்றி கூறினார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai