சுடச்சுட

  

  கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   பிஎஸ்என்எல் நிர்வாகம் சார்பில், பணியாளர்கள் சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான அகில இந்திய அளவிலான தேர்தல் கடந்த 7-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தேர்வான சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்னையை சரிசெய்யக் கோரி, அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.தனசேகர் தலைமை வகித்தார். மாநில நிதிச் செயலர் பி.வெங்கடேசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்டச் செயலர் எஸ்.ஆனந்த், பொருளர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 27-ஆம் தேதி தர்னா, ஒத்துழையாமைப் போராட்டம், ஜன.10-ஆம் தேதி "தில்லி சலோ' ஆகிய போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai