சுடச்சுட

  

  பெருமாள் ஏரிக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

  By கடலூர்,  |   Published on : 21st December 2016 08:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாலாஜா ஏரியிலிருந்து பெருமாள் ஏரிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் எனக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
   இந்த சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோ.மாதவன், செயலர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், பொருளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷிடம் அளித்த மனு: பெருமாள் ஏரி நீரை பூவாணிக்குப்பம், சம்பாரெட்டிபாளையம், தாணூர், மேட்டுப்பாளையம், ஆணையம்பேட்டை, ஆலப்பாக்கம், பள்ளிநீர்ஓடை, பெத்தாங்குப்பம், கீழ் பூவாணிக்குப்பம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயத்துக்கும் குடிநீர்த் தேவைக்கும் பயன்படுத்தி வருகின்றன.
   இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் ஏரியில் நீர் இருப்பு பெருமளவு குறைந்துவிட்டது. இதனால் நடப்பாண்டு சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, என்எல்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு, வாலாஜா ஏரிக்கு அனுப்பி வைக்கப்படும் நீரை, அந்த ஏரியிலிருந்து பெருமாள் ஏரிக்கு திருப்பிவிட வேண்டும்.
   குறிப்பாக டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தில் வாலாஜா ஏரி நீரை, பெருமாள் ஏரிக்கு அனுப்ப வேண்டும்.
   இதன்மூலம், விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் பாதுகாக்க முடியும்.
   மேலும் பெருமாள் ஏரியின் மேற்குப் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 11 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில், தற்போது 6 அடி அளவுக்கே தண்ணீர் தேக்கப்படுகிறது.
   அதனை முதற்கட்டமாக 7 அடியாக உயர்த்தி தண்ணீர் தேக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai