சுடச்சுட

    

    நெய்வேலி, பண்ருட்டி பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பேனரில், சசிகலாவின் படத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.
     நெய்வேலி, வட்டம்-9 எம்ஜிஆர் சிலை அருகே அதிமுக முன்னாள் மாவட்டப் பிரதிநிதி தண்டபாணி மற்றும் நிர்வாகிகள் சார்பில், கட்சியின் பொதுச் செயலராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் எனக் கோரி அவரது படத்துடன் கூடிய பேனர் வைக்கப்பட்டது.
     இந்த பேனரில் இருந்த சசிகலாவின் படத்தை மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர்.
     இதேபோல், பண்ருட்டி அருகே சாத்திப்பட்டு சாலையில் வைத்திருந்த பேனரிலும் சசிகலாவின் படத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai