Enable Javscript for better performance
கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி

    By கடலூர்,  |   Published on : 22nd December 2016 08:04 AM  |   அ+அ அ-   |    |  

    கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளை நடத்த தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
     இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி மாணவர்களிடையே தமிழில் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
     அதன்படி, நிகழாண்டு மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் வரும் 23-ஆம் தேதி காலை 9 மணிக்கு தேவனாம்பட்டிணத்தில் உள்ள அரசு பெரியார் கலைக் கல்லூரியில் நடைபெறுகிறது.
     இதில், முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.
     ஒரு கல்லூரியிலிருந்து ஒருவர் வீதம் 3 பிரிவுகளுக்கு தெரிவு செய்து அனுப்பி வைக்க வேண்டும்.
     போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் அந்தந்தக் கல்லூரி முதல்வரிடம் இருந்து உரிய படிவத்தை நிறைவு செய்து போட்டி தொடங்கும் முன்பு வழங்க வேண்டும்.
     போட்டியில் அரசு, தனியார் கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, கல்வியியல் கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai