Enable Javscript for better performance
சிதம்பரம் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரம் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

    By சிதம்பரம்,  |   Published on : 22nd December 2016 07:55 AM  |   அ+அ அ-   |    |  

    சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில், 1979-80இல் பிளஸ்-2 பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     என்.எல்.சி. இந்தியா நிறுவன துணைப் பொது மேலாளர் டாக்டர் விஜயலட்சுமி சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற, இந்த முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில், 24 பேர் பங்கேற்று தங்களது பள்ளிக் கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் மீனாட்சி ராமச்சந்திரன், உஷா மனோகரன், சிவகாமி பாலன், லலிதா ஜெயராமன், விஜயலட்சுமி சம்பத்குமார், கமலா ரவி, கலைச்செல்வி ராமநாதன், பூங்குழலி, டாக்டர் சாந்திர, அலமேலு நாத்தியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர்.தர்பாரண்யன் மற்றும் ஆசிரியர்களை கௌரவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினர். மேலும், பள்ளி வளர்ச்சிக்காக ரூ.25 ஆயிரம் நிதியுதவி அளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai