சுடச்சுட

  

  சிறுவன் கொலை வழக்கில் இளைஞருக்கு கடலூர் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
   கடலூர் மாவட்டம், ஆலடி அருகே உள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த வைத்தியலிங்கம் மகன் ஆகாஷ் வர்மா (4). கடந்த மே மாதம் 7-ஆம் தேதி ஆகாஷ்வர்மாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
   ஆனால், சிறிது நேரம் கழித்து சிறுவனைக் காணவில்லை. உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் தேடிய போது சிறுவன்
   அதே பகுதியில் பஞ்சமூர்த்தி மகன் ஆதிகேசவபெருமாள் (32) என்பவரது வீட்டிலுள்ள அண்டாவில் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார்.
   உடனடியாக அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த போது சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
   இதுகுறித்து, ஆலடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆதிகேசவபெருமாளை கைது செய்தனர். இதில், ஆதிகேசவபெருமாள் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி, மது குடிப்பதற்காக சிறுசிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
   சம்பவம் அன்று சிறுவன் அணிந்திருந்த வெள்ளி அரைஞாண் கயிற்றுக்காக, அவரது கழுத்தை நெறித்து கயிறை திருடியது தெரிய வந்தது.
   இதுகுறித்து, கடலூர் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி எம்.செல்வம் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
   புதன்கிழமை இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில், சிறுவனை கொலை செய்த ஆதிகேசவபெருமாளுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
   இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
   இந்த வழக்கில் 7 மாதத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai