சுடச்சுட

    

    கடலூர் கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறையில் சுமார் 800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
     செவ்வாய்க்கிழமை சிறை அறைகளில் சிறைக் காவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது, சென்னை, எண்ணூரைச் சேர்ந்த தண்டனைக் கைதி, ச.தனசேகரன் (32) அடைக்கப்பட்டிருந்த அறையில் செல்லிடப்பேசி மற்றும் அதற்கான பேட்டரி இருப்பதைக் கண்டுபிடித்து அவற்றை கைப்பற்றினர். இதுகுறித்து, சிறை அலுவலர் ஆர்.ஜெயராமன் (58) அளித்த புகாரின் பேரில், கடலூர் முதுநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai