சுடச்சுட

  

  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 16-ஆம் நாள் துக்க நிகழ்வு திட்டக்குடியில் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
   நிகழ்ச்சிக்கு, கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலர் ஆ.அருண்மொழித்தேவன் எம்.பி. தலைமை வகித்து, ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
   பின்னர் 1,000 பேருக்கு அன்னதானமும், ஜெயலலிதா மறைவையொட்டி மொட்டையடித்தவர்களுக்கு வேட்டி, துண்டுகளையும் வழங்கினார்.
   நிகழ்ச்சியில் சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினர் மா.சந்திரகாசி, சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியன், மங்களுர் ஒன்றியச் செயலர் கே.பி.கந்தசாமி, திட்டக்குடி நகரச் செயலர் ஆர்.நீதிமன்னன், மாவட்டப் பிரதிநிதி சிறுமுளை முத்துராமன், வழக்குரைஞர் கலைச்செல்வன், பொதிகை செந்தில்குமார், நகர வங்கித் தலைவர் பி.எம்.முல்லைநாதன், பேரவை நிர்வாகி செல்வராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   இதேபோல, ராமநத்தம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மங்களுர் ஒன்றியச் செயலர் கே.பி.கந்தசாமி கலந்து கொண்டு ஜெயலலிதா படத்துக்கு அஞ்சலி செலுத்தி அன்னதானம் வழங்கினார்.
   ஏந்தல் பரமசிவம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் கீழக்கல்பூண்டி பரமசிவம், ராமநத்தம் அருள், விஜயமகேந்திரன், சந்திரபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai