சுடச்சுட

    

    சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட பரங்கிப்பேட்டை ஒன்றியம், தில்லைவிடங்கன் கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையில், கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
     ஆய்வின்போது, விற்பனையாளர் ராமசாமியிடம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு வகைகள், மண்ணெண்ணை மற்றும் அத்தியாவசிய பொருள்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.
     பின்னர், பொதுமக்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் அனைத்து வேலை நாள்களிலும் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
     மேலும், பொருள்கள் வாங்க வந்திருந்த பொதுமக்களிடமும் எம்எல்ஏ குறைகளை கேட்டறிந்தார்.
     ஆய்வின்போது, பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் அசோகன், சிதம்பரம் நகரச் செயலாளர் ஆர்.செந்தில்குமார், முன்னாள் ஒன்றியச் செயலாளர் கனகராஜன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கர்ணா, தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் கார்த்திகேயன், சுவாமிநாதன், நிர்வாகிகள் வீரபாண்டியன், திருமுருகன், அருள்மணி, பரமாநந்தம், காளிமுத்து, ஆறுமுகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai