சுடச்சுட

  

  பொங்கல் பரிசுத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரிக்கை

  By கடலூர்,  |   Published on : 22nd December 2016 08:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொங்கல் பரிசுத் தொகையை ரூ.ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
   அந்தச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் திட்டக்குடியில் அண்மையில் நடைபெற்றது.
   கூட்டத்துக்கு வட்டத் தலைவர் க.கோவிந்தராஜ் தலைமை வகிக்க, நிர்வாகிகள் வேலாயுதம், மணவாளன், கண்ணன், மாயமூர்த்தி, அரசன் முன்னிலை வகித்தனர்.
   மாவட்டத் தலைவர் ந.பாண்டியன், துணைத் தலைவர் வேணுகோபால் ஆகியோர் ஓய்வூதியர் தினம் கொண்டாடப்பட காரணமான வழக்கு, அதன் தீர்ப்பின் சாராம்சம் குறித்துப் பேசினர்.
   கூட்டத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
   மேலும், ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு 7 சதம் அகவிலைப்படி வழங்கிய தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது.
   பொங்கல் பரிசுத் தொகையை ரூ.ஆயிரமாக உயர்த்தி வழங்கக் கோருவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   செயலர் டி.கருப்பையா வரவேற்க, நிர்வாகி பெரியசாமி நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai