Enable Javscript for better performance
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத்திறன் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டி

    By கடலூர்,  |   Published on : 22nd December 2016 08:03 AM  |   அ+அ அ-   |    |  

    விருத்தாசலம் அருகேயுள்ள வேப்பங்குறிச்சியில் கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.
     அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார வள மையம் சார்பில் நடைபெற்ற இந்தப் போட்டி தொடக்க விழாவில், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அறிவழகன் தலைமை வகித்தார்.
     மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, பலூன் உடைத்தல், வண்ணம் தீட்டுதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
     ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் சகாயராஜ், தமிழரசன், கொளஞ்சி, பஞ்சவர்ணம் ஆகியோர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
     முன்னதாக, வட்டார வள மைய மேற்பார்வையாளர் மாறன் வரவேற்க, நிறைவில் ஆசிரியர் குணசேகரன் நன்றி கூறினார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai