சுடச்சுட

    

    விபத்து இழப்பீடு வழங்காததால் புதுச்சேரி மாநில அரசுப் பேருந்து ஜப்தி

    By கடலூர்,  |   Published on : 22nd December 2016 08:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விபத்து இழப்பீடு வழங்காததால், புதுச்சேரி மாநில அரசுப் பேருந்து, கடலூரில் புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
     கடலூர் முதுநகரைச் சேர்ந்தவர் பார்த்திபன் (39), தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வருகிறார்.
     இவர், கடந்த 30-4-2006 அன்று மோட்டார் சைக்கிளில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
     அனுமந்த் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, இவர் மீது புதுச்சேரி மாநில அரசுப் பேருந்து மோதியது.
     இதில், பார்த்திபன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, விபத்து இழப்பீடு கோரி பார்த்திபன், கடலூர் மாவட்ட கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில் கடந்த 2015-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பில் பாதிக்கப்பட்ட பார்த்திபனுக்கு, புதுச்சேரி மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ.4.31 லட்சம் இழப்பீடாக வழங்க உத்திரவிடப்பட்டது.
     ஆனால், இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால், நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பில் வட்டியுடன் சேர்த்து ரூ.6.63 லட்சம் வழங்கிடவும், பணம் வழங்கவில்லை எனில் பேருந்தை ஜப்தி செய்திடவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடலூர் பேருந்து நிலையத்துக்கு வந்த புதுச்சேரி மாநில அரசுப் பேருந்தை, கடலூர் நீதிமன்ற ஊழியர்கள் புதன்கிழமை ஜப்தி செய்து நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai