சுடச்சுட

  

  விருத்தாசலத்தில் 101 இசைக் கலைஞர்கள் இசை ஊர்வலம்

  By கடலூர்,  |   Published on : 22nd December 2016 08:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருத்தாசலத்தில் 101 இசைக் கலைஞர்களின் இசை ஊர்வலம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   தமிழ்நாடு மருத்துவர் சமுதாய அகத்தியர் இசைப் பேரவை சார்பில், சங்கீத மும்மூர்த்திகளின் இசை விழா விருத்தாசலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
   விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் சங்கீத மும்மூர்த்திகளான முத்துசாமி தீட்சிதர், தியாகராஜ சுவாமிகள், சியாமள சாஸ்திரிகள் ஆகியோர் உருவப்படத்துக்கு சிறப்பு தீப தூப ஆராதனைகள், சிறப்பு வழிபாடுகளுடன், இசைக் கலைஞர்களின் இசைக் கச்சேரி நடைபெற்றது.
   இசைக் கலைஞர்கள் தவில் மற்றும் நாகஸ்வரத்தை வாசித்து விருத்தகிரீஸ்வரரை தரிசினம் செய்தனர். தொடர்ந்து, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் இருந்து 101 நாகஸ்வர, தவில் இசைக் கலைஞர்கள் இசைத்த வண்ணம் ஊர்வலமாக, சன்னதி வீதி, கடை வீதி, பாலக்கரை, ஜங்ஷன் சாலை வழியாகச் சென்று விழா நடைபெறும் இடத்தை அடைந்தனர்.
   ஊர்வலத்தை தொழில்அதிபர் எம்.அகர்சந்த் தொடக்கி வைத்தார்.
   சங்கத் தலைவர் ச.பாண்டுரங்கன், செயலர் சு.ரவிச்சந்திரன். துணைத் தலைவர் டி.கொளஞ்சி நிர்வாகிகள் சோ.ரமேஷ், ஆறுமுகம், கே.சண்முகம் உள்ளிட்டோர் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
   தொடர்ந்து தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை வி.டி.கலைச்செல்வன் எம்எல்ஏ தொடக்கி வைத்தார்.
   கலைமாமணி மாம்பலம் எம்.கே.எஸ். சிவா, எஸ்.என்.மணிகண்டன் ஆகியோரின் நாகஸ்வரமும், கலைமாமணி மன்னார்குடி எம்.ஆர்.வாசுதேவன் திருக்கடையூர் டிஜி. பாபு ஆகியோரின் தவிலிசையும் நடைபெற்றது.
   விழாவில் தொழில்அதிபர் எஸ்.பி.சுப்பிரமணியன் செட்டியார், ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் புலியூர் கே.ராஜவேலு, மருத்துவ சமுதாய பேரவை மாநில பொதுச் செயலர் சுப்பிரமணியன், பொருளாளர் மதிவாணன், இசை பேரவைத் தலைவர் சிவசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai