சுடச்சுட

  

  காவிரி டெல்டா கடைமடைப் பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களை வறட்சிப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் பயிரிடப்பட்டுள்ளசம்பா நெற் பயிர்கள், போதிய தண்ணீர் இன்றி கருகிவிட்டன. எனவே, இந்த இரு வட்டங்களையும் வறட்சி பகுதியாக அறிவித்து இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், காட்டுமன்னார்கோவில் தெற்கிருப்பு தோளிஸ்வரர் கோயில் நிலத்தை பயிர் செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி விவசாயிகள், மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் பிரகாஷ் தலைமையில் காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், வட்டாட்சியர் ஜெயந்தியை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். இதில், விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் மகாலிங்கம், குத்தகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai