சுடச்சுட

  

  விருத்தாசலத்தில் வங்கிக் கணக்கு தொடங்குவது குறித்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
   விருத்தாசலத்தில் வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்யும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உள்ளது. தற்போது அரசு ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையை ஊக்குவித்து வருவதால், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகளிடம் நேரடியாக பணம் வழங்குவதை தவிர்த்து, அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
   இதனால், விருத்தாசலம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் வங்கிக் கணக்கு தொடங்குவது குறித்த விழிப்புணர்வுக் கூட்டம், மாவட்ட விற்பனைக்குழுச் செயலர் சுரேஷ்பாபு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   கரூர் வைஸ்யா வங்கி உதவிப் பொது மேலாளர் முத்துக்கிருஷ்ணன், துணைப் பொது மேலாளர் லாவண்யா ஆகியோர் வங்கிக் கணக்கு தொடங்குவது மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினர். கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, விருத்தாசலம் வங்கி மேலாளர் பார்த்தீபன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai