சுடச்சுட

  

  அரசு உதவித் தொகை விநியோகத்தில் தாமதம்: வங்கியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

  By சிதம்பரம்,  |   Published on : 23rd December 2016 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசு உதவித் தொகை விநியோகத்தில் ஏற்படும் தாமதத்தைக் கண்டிப்பதாகக் கூறி, லால்பேட்டை இந்தியன் வங்கிக் கிளையை மாற்றுத் திறனாளிகள், விதவைகள் மற்றும் முதியோர் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
   காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் செயல்படும் இந்தியன் வங்கிக் கிளை மூலம் லால்பேட்டை, கொளக்குடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், முதியோர், விதவைகள் உள்ளிட்டோர் அரசு உதவித் தொகை பெற்று வருகின்றனர். பணத் தட்டுப்பாடு பிரச்னை காரணமாக முறையாக உதவித் தொகை வழங்குவதில்லை என்றும், அப்படியே வழங்கினாலும் ஒரு நபருக்கு ரூ.400 மட்டுமே வழங்கப்படுவதாகவும் பயனாளிகள் புகார் தெரிவித்து வந்தனர்.
   இந்த நிலையில், மேற்கூறிய கிராமங்களைச் சேர்ந்த அரசு உதவித் தொகை பெறும் மாற்றுத் திறனாளிகள், முதியோர் மற்றும் விதவைகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலர் பிரகாஷ் தலைமையில் வங்கியை முற்றுகையிட்டனர். கட்சி நிர்வாகிகள் தனபால், புகழேந்தி, சிங்கரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   தகவலறிந்த வங்கி துணை மேலாளர் குப்புசாமி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இனி வரும் மாதங்களில் வங்கி மக்கள் தொடர்பாளர் மூலம், பயனாளிகள் வசிக்கும் கிராமப் பகுதிகளுக்கே சென்று தலா ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை தாற்காலிகமாகக் கைவிடுவதாகக் கூறி கலைந்து சென்றனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai