சுடச்சுட

    

    கொலை வழக்கில் 2 ஆண்டுகளாகத் தேடப்பட்ட இளைஞரை, போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
     ராமநத்தத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர், 2014-ஆம் ஆண்டு வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 10 பேரை டெல்டா பிரிவு தனிப் படையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் ராமநத்தம் காவல்உதவி ஆய்வாளர் தேவேந்திரன் வியாழக்கிழமை அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார்.
     அப்போது, அந்த வழியாகச் சென்ற அரியலூர் மாவட்டம், சாத்தனூரைச் சேர்ந்த குப்புராமன் மகன் ஞானமூர்த்தி (36) என்பவரை விசாரித்தபோது, அவர் உதவி ஆய்வாளரை மிரட்டினாராம். இதனையடுத்து உதவி ஆய்வாளர் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் ஞானமூர்த்தியை கைது செய்தனர்.
     பின்னர் ஞானமூர்த்தியிடம் நடத்திய விசாரணையில், அவர் தங்கராஜ் கொலை வழக்கில் 2 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் டெல்டா போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
     அதேபோல், ராமநத்தத்தில் கடந்த மாதம் மளிகைக்கடையில் திருடியதாக, விழுப்புரம் மாவட்டம், கல்லாநத்தம் புதுகாலனியைச் சேர்ந்த சின்னதுரை மகன் பிரபாகரன் (25) என்பவரை டெல்டா தனிப்படை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். இந்த வழக்கில், மளிகைக் கடையில் திருடுபோன செல்லிடப்பேசி மூலம் துப்பு துலங்கியதாக தனிப்படையினர் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai