சுடச்சுட

  

  சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, கடலூரில் சிஐடியூ சங்கத்தினர் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.
   அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், தினக் கூலி, தாற்காலிக தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை அனைத்து அரசு, தனியார் துறை நிறுவனங்களிலும் அமல்படுத்த வலியுறுத்தி சிஐடியூ சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
   அதன்படி கடலூரில் சிப்காட் வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டக் குழு உறுப்பினர் எம்.முரளி தலைமை வகித்தார். சிப்காட் பகுதி தலைவர் ஆர்.ஆளவந்தார், நிர்வாகிகள் தேவநாதன், சுரேந்தர், திருமால், குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai