சுடச்சுட

  

  சிதம்பரம் நகராட்சியில் புகைப்படத்துடன் கூடிய பட்டா பெறுவதற்கு விசாரணைக்கு ஆஜராகாதோர் கவனத்துக்கு

  By கடலூர்,  |   Published on : 23rd December 2016 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் நகராட்சியில் புகைப்படத்துடன் கூடிய பட்டா பெறுவதற்கான விசாரணைக்கு ஆஜராகாதோர், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தெரிவித்தார்.
   இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசால் மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில், வருவாய் பின்தொடர் பணியின் கீழ் வருவாய் பதிவேடுகளில் தற்போது வரையிலான பதிவுகளை சரிசெய்து, நில உரிமையாளர்களுக்கு ஆவணங்களின் அடிப்படையில் பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
   அதன்படி சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட பட்டா பகுதிகளில் கிரையம், பூர்வீகம் மூலம் பாத்தியப்பட்ட வீடுகள், மனைகள், விவசாய நிலங்களுக்கும், நத்தம் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசிப்பவர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இப்பணி டிசம்பர் மாதம் முடிவடைகிறது.
   இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் பட்டாக்கள் இனிவரும் காலங்களில் முக்கிய ஆவணமாகக் கருதப்படும் என்பதால், இதுவரை பட்டா பெறாதவர்கள் தங்களது சொத்துக்குரிய ஆவணங்களை சிதம்பரம் நகர நிலவரித் திட்ட வட்டாட்சியரிடம் ஆஜர்படுத்தி புகைப்படத்துடன் கூடிய பட்டா பெற்றுக்கொள்ளலாம்.
   சிதம்பரம் நகராட்சியில் இதுவரை 9,989 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 920 நபர்கள் விசாரணைக்கு ஆஜராகாததால் பட்டா வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே, விசாரணைக்கு ஆஜராகாத நபர்கள் உரிய ஆவணங்களுடன் சிதம்பரம் நகர நிலவரித் திட்ட வட்டாட்சியரை அணுகலாம்.
   பொதுமக்கள் சிரமமின்றி விதிகளின் அடிப்படையில் பட்டா பெறவும், இந்தப் பணியை மேற்பார்வை செய்யவும் தனித் துணை ஆட்சியர் (நிலம் எடுப்பு) தினேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai