சுடச்சுட

    

    தனியார் ஆலை ஊழியர்களின் பிரச்னையை தீர்க்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

    By கடலூர்  |   Published on : 23rd December 2016 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் சிப்காட்டில் செயல்படும் தனியார் ஆலை நிர்வாகம், ஊழியர்களின் பிரச்னையை தீர்க்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
     அந்தக் கட்சியின் கடலூர் மாவட்டச் செயற்குழுக் கூட்டம், செயற்குழு உறுப்பினர் கோ.மாதவன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் மூசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     கூட்டத்தில், கடலூர் சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் குறிப்பிட்ட தனியார் தொழிற்சாலையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், சட்டரீதியிலான சலுகைகள், பாதுகாப்புச் சாதனங்கள் வழங்காமல் கொத்தடிமைபோல் நடத்துகின்றனர்.
     இந்த ஆலையில் பணியின்போது விபத்தில் சிக்கி கால் இழந்த தொழிலாளிக்கு இழப்பீட்டை நிர்வாகம் வழங்கவில்லை.
     தொழிற்சங்க நிர்வாகிகளை பழிவாங்கும் நடவடிக்கையை நிர்வாகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்தப் போக்கைக் கைவிட்டு, தொழிலாளர்களின் கோரிக்கைகளை பேசித் தீர்க்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai