சுடச்சுட

    

    துணைவேந்தர்களை பதவிநீக்கம் செய்ய சமாஜ்வாதி கட்சி வலியுறுத்தல்

    By சிதம்பரம்  |   Published on : 23rd December 2016 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சசிகலாவை சந்தித்த பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக சமாஜ்வாதி கட்சி வலியுறுத்தியது.
     இதுகுறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் இளங்கோயாதவ் வெளியிட்ட அறிக்கை: எந்தவித அரசுப் பொறுப்பிலும் இல்லாத வி.கே.சசிகலாவை, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழக துணை வேந்தர்களும் சந்தித்ததைக் கண்டிக்கிறோம்.
     இத்தகைய செயல் கல்வியாளர்கள், பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான வித்யாசாகர் ராவ், அனைத்து துணை வேந்தர்களையும் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என அதில் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai