Enable Javscript for better performance
தேசிய தடகளப் போட்டி: கடலூர் மாணவர் சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய தடகளப் போட்டி: கடலூர் மாணவர் சிறப்பிடம்

    By கடலூர்,  |   Published on : 23rd December 2016 08:21 AM  |   அ+அ அ-   |    |  

    தேசிய தடகளப் போட்டியில் கடலூர் மாணவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
     ஆந்திரம் மாநிலம், விசாகப்பட்டினத்தில் 14-ஆவது தேசிய ஜூனியர் தடகளப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் கடலூர் சி.கே. பள்ளி மாணவர் ஜி.லோகேஷ்ராஜ், 16 வயதுக்குள்பட்டோர் பிரிவில், வட்டு எறிதல் போட்டியில் பங்கேற்று 3-ஆவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர் ஜி.லோகேஷ்ராஜ், பயிற்சியளித்த உயற்கல்வி ஆசிரியர் பி.கார்த்திக் ஆகியோரை சி.கே. கல்விக் குழும இயக்குநர் டி.சந்திரசேகரன், பள்ளி முதல்வர் பி.அய்யப்பன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai