சுடச்சுட

  

  நாயை பைக்கில் கட்டி இழுத்துச் சென்றதாக சுகாதார ஆய்வாளர் மீது புகார்

  By கடலூர்,  |   Published on : 23rd December 2016 08:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dog

  நாயை பைக்கில் கட்டி இழுத்துச் சென்றதாக சுகாதார ஆய்வாளர் மீது விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் வியாழக்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
   விருத்தாசலம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் பழனி. அதேப் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவர், வியாழக்கிழமை விருத்தாசலம் கோட்டாட்சியர் கே.எம்.செந்தில்குமாரிடம் அளித்த மனு: எனது கடைக்கு நகராட்சி சுகாதார ஆய்வாளர் வியாழக்கிழமை வந்துள்ளார். அவர், நான் வளர்த்து வரும் நாயை எனக்குத் தெரியாமல் சைக்கிள் செயின் மூலம் தனது பைக்கில் கட்டி தரதரவென இழுத்துச் சென்றார்.
   இதனால் காயமடைந்த நாயை மீட்டு கால்நடை மருத்துவமனையில் அனுமதித்தேன். இதுதொடர்பாக சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் தெரிவித்தார்.
   இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி விருத்தாசலம் காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு கோட்டாட்சியர் பரிந்துரைத்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai