சுடச்சுட

  

  ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட ரதம் வியாழக்கிழமை பண்ருட்டி வந்தது.
   இந்த விழாவையொட்டி, 108 திவ்ய தேசங்களில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று வருகிறது. இதற்காக திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ராமானுஜர் ரதம் புறப்பட்டது. அதில் ஸ்ரீதேவி, பூமிதேவி, பெருமாள் மற்றும் ராமானுஜர் எழுந்தருளினர். இந்த ரதம் புதன்கிழமை கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலுக்கு வந்தது. அங்கு பெருமாள்-தாயாருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
   வியாழக்கிழமை காலை பண்ருட்டி வழியாக வந்த ராமானுஜர் ரதத்துக்கு பக்தர்கள் வரவேற்பு அளித்து, ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத பெருமாள் மற்றும் ராமானுஜரை தரிசனம் செய்தனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai