சுடச்சுட

  

  பண்ருட்டி பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும்: டிஐஜி அனிசா ஹூசேன்

  By நெய்வேலி,  |   Published on : 23rd December 2016 08:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பண்ருட்டி பேருந்து நிலையத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த புறக்காவல் நிலையம் அமைக்கப்படும் என விழுப்புரம் காவல் சரக டிஐஜி அனிசா ஹூசேன் கூறினார்.
   பண்ருட்டி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை அவர் ஆய்வு செய்தார். காவல் நிலையக் கோப்புகள், பதிவேடுகளைப் பார்வையிட்டார். காவலர்களின் பணி விவரங்களையும் கேட்டறிந்தார்.
   பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பண்ருட்டி காவல் சரகப் பகுதியில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. குற்ற நிகழ்வுகள் குறைந்துள்ளன. குற்றச் சம்பவங்களைத் தடுக்க காவல் துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
   பாதுகாப்பு கருதி வணிக நிறுவனங்களில் அதன் உரிமையாளர்கள் கேமரா பொறுத்துவதோடு, இரவு நேரக் காவலர்களையும் பணியமர்த்த வேண்டும். குற்ற நிகழ்வுகளில் ஈடுபடுவோரை கண்காணிப்புக் கேமரா மூலம் எளிதில் கண்டறிய முடிகிறது.
   மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் அதிக விபத்துகள் நடைபெறுகின்றன. இதனைக் கட்டுப்படுத்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பண்ருட்டி பேருந்து நிலையத்தில் திருட்டு மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த புறக்காவல் நிலையம் அமைக்கப்படும்.
   போலீஸ், வழக்குரைஞர், பத்திரிகை நிருபர் என வாகனங்களில் போலியாக ஸ்டிக்கர் ஒட்டி வருவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
   அப்போது, பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் முரளிதரன் உடனிருந்தார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai