சுடச்சுட

  

  மருத்துவ காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

  By கடலூர்,  |   Published on : 23rd December 2016 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மருத்துவத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அமைச்சுப் பணியாளர் செயல்திறன் கூட்டு இயக்கம் (ஜாஸ்மின்ஸ்) கோரிக்கை விடுத்துள்ளது.
   இதுகுறித்து அந்த இயக்கத்தின் மருத்துவத் துறை மாநிலத் தலைவர் ம.ரா.சிங்காரம் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசுப் பணியாளர்களுக்கு போனஸ் உச்சவரம்பு ரூ.7 ஆயிரமாக உயர்த்தி வழங்கியதுபோல், மாநில அரசுப் பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். மேலும், மத்திய அரசு அறிவித்துள்ள புதிய சம்பளக் குழு பரிந்துரைகளை மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அமல்படுத்துதல், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கும்போது தேவையான அமைச்சுப் பணியாளர் பணியிடங்களை உருவாக்குதல் வேண்டும்.
   மாவட்டந்தோறும் நலப் பணிகள் இணை இயக்குநர், மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளுக்கு துணை இயக்குநர் (நிர்வாகம்) பணியிடங்களை உருவாக்க வேண்டும். மருத்துவத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார். மேலும், ஜூலை மாதம் முதல் 7 சதவீத அகவிலைப் படியை ரொக்கமாக வழங்கிய தமிழக அரசுக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai