சுடச்சுட

  

  விருத்தாசலத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்டதாக 3 ஆட்டோக்களை மோட்டார் வாகன ஆய்வாளர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தார்.
   விருத்தாசலம்-கடலூர் சாலையில், விருத்தாசலம் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டார்.
   வாகனங்களில் உரிய ஆவணங்கள் உள்ளதா, ஓட்டுநர்கள் சீருடையில் உள்ளனரா, முறையாக வரி செலுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து சோதனை நடத்தினார்.
   அப்போது 3 ஆட்டோக்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயங்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனங்களை பறிமுதல் செய்து, விருத்தாசலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai