சுடச்சுட

  

  அடித்தட்டு மக்களுக்கு உதவும் பண்பு அனைவரிடமும் வளர வேண்டும்: என்எல்சி இந்தியா தலைவர்

  By DIN  |   Published on : 24th December 2016 09:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு உதவும் பண்பு அனைவரிடமும் வளர வேண்டும் என என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் சரத்குமார் ஆச்சார்யா கூறினார்.
  என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில், நெய்வேலி இந்திய கிறிஸ்தவ கலாசார சங்கத்துடன் இணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகை வியாழக்கிழமை மாலை கொண்டாடப்பட்டது. நெய்வேலி லிக்னைட் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் சரத்குமார் ஆச்சார்யா பங்கேற்று பேசியது: மனிதனை மனித நேயத்துடன் நடத்துவதற்கு ஆன்மிகம் பெரும் பங்காற்றுகிறது.
  இதுபோன்ற விழாக்கள் மூலம் ஜாதி, மத, இன, பிராந்திய உணர்வுகள் நீங்கி, மக்களிடம் ஒருமைப்பாடு உருவாகிறது என்றார்.
  மேலும், கிறிஸ்தவ நிறுவனங்கள் மேற்கொண்டுவரும் சமூக மற்றும் கல்விப் பணிகளை பாராட்டியவர், சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு உதவும் பண்பு அனைவரிடமும் வளர வேண்டும் என்றார்.
   விழாவில், கத்தோலிக்க திருச்சபை, தென் இந்திய திருச்சபை, ஆற்காடு லூத்ரன் திருச்சபை, மார்த்தோமா மற்றும் ஆர்தோடக்ஸ் சிரியன் ஆகிய சபைகளைச் சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.   புனித பால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, புனித ஜோசப் குளுனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலைப் பள்ளி மற்றும் டேனிஷ் மிஷன் பள்ளி மாணவர்கள் கிறிஸ்து பிறப்பை சித்தரிக்கும் நாடகம் நடத்தினர். பின்னர், நெய்வேலி திருச்சபைகளின் பாடல் குழுவினர் கிறிஸ்துமஸ் கீதங்கள் பாடினர்.
   முன்னதாக, கிறிஸ்து பிறப்பு தினத்தை முன்னிட்டு யோகமாயா ஆச்சார்யா, சுதேஷ்னா தாஸ் ஆகியோரால் கேக் வெட்டப்பட்டது. இந்த நிகழ்வில், என்எல்சி இந்தியா நிறுவன இயக்குநர்கள் சுபீர்தாஸ், தங்கப்பாண்டியன், செல்வக்குமார், விக்ரமன், நிறுவனத்தின் செயல் இயக்குநர்கள், உயர் அதிகாரிகள், ஊழியர்கள், நெய்வேலி நகரிய பங்குப் பணியாளர் அருட்தந்தை ரட்சகர், புனித பால் பள்ளி முதல்வர் அருட்தந்தை நிர்மல்ராஜ், புனித ஆந்தோனியார் பள்ளி முதல்வர் அருட்தந்தை ஆரோக்கிய ஆனந்த ராஜ், நகரியத்தின் உதவிப் பங்குப் பணியாளர்கள், அருள்தந்தை பிலவேந்திரன், அருள்தந்தை ஜான் பவுல் ராஜ், புனித பால் பள்ளி துணை முதல்வர் அருள்தந்தை ஆல்வின் அன்பரசு, புனித ஜோசப் குளூனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் அருள்சகோதரி மெரிசியா, ஆற்காடு லுத்ரன் திருச்சபை போதகர்கள் ஜான்சன் அசோக் குமார், அகஸ்டின், முரளி கிறிஸ்டியான், தென் இந்தியத் திருச்சபை போதகர் சேகர் கிருபாகரன், இந்திய கிறிஸ்தவ கலாசார சங்கச் செயலர் சாலமன் செல்வசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai