சுடச்சுட

    

    அண்ணாமலை பல்கலை.யில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து

    By DIN  |   Published on : 24th December 2016 09:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் அனைத்துச் சமூக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும், கல்விக் கட்டணம், சேர்க்கைக் கட்டணம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இதற்கான ஆணை நிதிக் குழு மற்றும் ஆட்சிக் குழு ஒப்புதலுடன் பெறப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கையின் போதே எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு வழங்குவதைப் போல், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் கட்டணச் சலுகைகள் வழங்கப்பட உள்ளது என பல்கலைக்கழக நிர்வாகம் சுற்றறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai