சுடச்சுட

    

    ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

    By DIN  |   Published on : 24th December 2016 09:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க வலியுறுத்தி, காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தை நரிக்குறவர் இன மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
    ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மலைமேடு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க கடந்த 6 மாதங்களாக காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அலைவதாகவும், ஆனால் புகைப்படம் எடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
    இந்த நிலையில், நரிக்குறவர் இன மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் இணைந்து வெள்ளிக்கிழமை காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டச் செயலர் பிரகாஷ் தலைமை வகித்தார்.
    ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய அமைப்பாளர் மற்றும் 70-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் பங்கேற்றனர். பின்னர் துணை வட்டாட்சியரை சந்தித்து மனு அளித்தனர். ஆதார் அட்டை வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக துணை வட்டாட்சியர் உறுதி அளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai