Enable Javscript for better performance
கடலூரில் வெள்ளநீர் வடிகால் பணிகளை முறைப்படி மேற்கொள்ள வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    கடலூரில் வெள்ளநீர் வடிகால் பணிகளை முறைப்படி மேற்கொள்ள வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 24th December 2016 09:38 AM  |   அ+அ அ-   |    |  

    கடலூரில்வெள்ளநீர் வடிகால் பணிகளை முறைப்படி மேற்கொள்ள வேண்டும் என அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
    தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராகப் பொறுப்பேற்றுள்ள கிரிஜா வைத்தியநாதனுக்கு, கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து சங்கத்தின் இணைப் பொதுச் செயலர் புருஷோத்தமன் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், தேங்கியுள்ள மக்கள் நலன் சார்ந்த கோப்புகளை விரைந்து பார்வையிட்டு தீர்வு காண வேண்டும்.  கடலூர் நகராட்சியை "அம்ரூத்' நகராட்சியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
    இந்த திட்டத்தின் நடவடிக்கையை உடனடியாக தொடங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
    இந்த திட்டத்தை செயல்படுத்தும்போது, குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனையைப் பெற்று அமல்படுத்த வேண்டும்.
     கடலூரில் மழைநீர் வடிகால், கழிவுநீர் வடிகால் அனைத்தும் உரிய வழிமுறையின்படி அல்லாமல் கட்டப்பட்டுள்ளது. எனவே, வெள்ளநீர் வடிகால் பணிகள் கடலூரில் தொடங்கும்போது, லெவெலிங் பொறியாளர் ஆலோசனைப் பெற்று செயல்பட வேண்டும் என அதில்  தெரிவித்துள்ளனர்.

    kattana sevai