சுடச்சுட

  

  கடலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி டிச.28-இல் காத்திருப்புப் போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

  By DIN  |   Published on : 24th December 2016 09:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூரை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து, நிவாரணம் வழங்கக் கோரி, டிச.28இல் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
  இதுகுறித்து சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் கோ.மாதவன், செயலர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: பருவமழை பொய்த்ததால் வீராணம் ஏரி, பெருமாள் ஏரி, வெலிங்டன் ஏரிகளில் தண்ணீர் இல்லை. இதனால் பாசனத்துக்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே கடலூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து, கருகிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம், மானாவாரி பயிர்களுக்கு ரூ.10 ஆயிரம், கரும்புக்கு ரூ.50 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு, 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் 250 நாள்கள் பணி வழங்கி, சம்பளமாக ரூ.300 வீதம் அளிக்க வேண்டும். மானிய விலையில் கால்நடைகளுக்கு தீவனம் வழங்க வேண்டும். பரவனாறு உள்பட அனைத்து ஆறுகளின் கரைகளையும் பலப்படுத்துவதோடு, ஏரி, குளம், வாய்க்கால்களை தூர்வார வேண்டும். தமிழக அரசு ரூ.400 கோடி மதிப்பீட்டில் அறிவித்த கொள்ளிடம் தடுப்பணை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டது.
  இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து, வரும் 28-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai