சுடச்சுட

  

  குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கடலூர் ஒன்றியப் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிய உள்ளதாக தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

  அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சி.என்.பாளையம், நடுவீரப்பட்டு, குமலங்குளம், விலங்கல்பட்டு, வானமாதேவி, திருமானிக்குழி, கொடுக்கன்பாளையம், வெள்ளக்கரை பகுதிகளிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரை ராமாபுரம், காரைக்காடு, அன்னவல்லி, சேடப்பாளையம் ஆகிய ஊராட்சிகளிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களைப் பெற உள்ளேன்.  எனவே, மேற்குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாகவும், நேரிலும் தெரிவிக்கலாம் என அதில் எம்எல்ஏ குறிப்பிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai