சுடச்சுட

  

  விவசாயிகள் தற்கொலை: ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தவாக வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 24th December 2016 09:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்  நிறுவனர் தி.வேல்முருகன் வலியுறுத்தினார்.
  இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்வது அதிர்ச்சியளிக்கிறது. தேசிய உழவர் தினமான வெள்ளிக்கிழமை நாகப்பட்டினம் அருகே விவசாயி தியாகராஜன் தற்கொலை செய்துகொண்டது பெரும் துயரத்தைத் தருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் இதுவரை 34 விவசாயிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
   இதுபோன்ற சம்பவங்களை தமிழக அரசு உடனடியாக தடுக்க வேண்டியது அவசியம். தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகையை தமிழக முதல்வர் வழங்க வேண்டும். மேலும், காவிரி டெல்டா மாவட்டங்களில் முதல்வர் நேரில் ஆய்வு செய்து, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai