சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ், படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: படித்த வேலையற்ற இளைஞர்கள், சுயமாக தொழில் தொடங்கி வேலை வாய்ப்பினை பெற்றிடும் பொருட்டு, வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, தொழில் வணிகத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட தொழில் மையங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தில் இளைஞர்கள் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு 35 வயதுக்குள்ளும், இதர பிரிவினர், பெண்கள், ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினருக்கு 45 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருவாய் ரூ.1.50 லட்சத்துக்கு மிகக்கூடாது.
  பெண்கள், சிறுபான்மையினர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  இத்திட்டத்தில், உற்பத்தித் தொழிலுக்கு ரூ.10 லட்சம், சேவை தொடர்பான தொழிலுக்கு ரூ.3 லட்சம், வியாபாரம் தொடர்பான தொழிலுக்கு ரூ.1 லட்சம் வீதம் கடனுதவி வழங்கப்படும். திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
  திட்ட அறிக்கையில் பொதுப் பிரிவினர் 10 சதவீதமும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் 5 சதவீதம் விளிம்புத் தொகை செலுத்தினால் போதுமானது.
  மேலும், விவரங்களுக்கு கடலூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அல்லது 04142-290116 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என அதில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai