சுடச்சுட

  

  சிதம்பரம் அண்ணாமலைநகர் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில், ஒருங்கிணைந்த புவி நலன் மேலாண்மை என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான ஒருவாரப் பயிற்சி முகாம் டிச.19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.
  புதுதில்லி இந்திய தொழில்நுட்பக் கல்விச் சங்கம் சார்பில், நடைபெற்ற இந்த முகாமின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முத்தையா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ஜி.குப்பன் தலைமை வகித்தார். பேராசிரியர் வி.ராஜசேகர் வரவேற்றார்.
  அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் கே.ஆறுமுகம், பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசினார். விழா மலரை பதிவாளர் வெளியிட, முதல் பிரதியை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மைய இயக்குநர் எஸ்.புகழேந்தி பெற்றுக்கொண்டார். பேராசிரியர் ராமச்சந்திரன் வாழ்த்துரையாற்றினார். பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி, எஸ்.ஆர்.செல்வி ஆகியோர் விழாவை தொகுத்து வழங்கினர்.
  பயிற்சியில் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியர்களுடன், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், புத்தூர், நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியர்களும் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் பி.ராமலிங்கம் செய்திருந்தார். பேராசிரியர் எம்.கோவிந்தராஜன் நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai