சுடச்சுட

  

  இந்திய மாணவர் சங்கத்தின் கடலூர் மாவட்ட 20-ஆவது மாநாடு விருத்தாசலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
  மாநாட்டையொட்டி, கொளஞ்சியப்பர் கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி மாநாட்டு அரங்கை அடைந்தது.
  அங்கு மாவட்டக்குழு எஸ்.சுகன்யா மாநாட்டு கொடியை ஏற்றினார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.குமரவேல் தலைமை வகித்தார். மாவட்டக் குழு எஸ்.சின்னதம்பி வரவேற்றார். துணைச் செயலர் சி.சந்திரமோகன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.
  மாநிலச் செயலர் பி.உச்சிமாகாளி மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார். செய்ததும் செய்ய வேண்டியதும் என்ற அறிக்கையை மாவட்டச் செயலர் கே.சுனில்குமார் முன்மொழிந்தார். மாநில செயற்குழு ஏ.அறிவழகன், மாவட்டச் செயலர்கள் ஆர்.அமர்நாத், வி.மேரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
  நிகழ்ச்சியில் புதிய மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில துணைத் தலைவர் ஏ.டி.கண்ணன் நிறைவுரை வழங்கினார்.
  மாநாட்டில், கடலூர் மாவட்டத்தில் அரசு சட்டம் மற்றும் பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். மாவட்ட செயற்குழு ஏ.அரிகிருஷ்ணன் நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai