சுடச்சுட

  

  முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 29-ஆவது நினைவு தினத்தையொட்டி, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் அவரது சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
  கடலூர்: கடலூர் நகர அதிமுக சார்பில், மஞ்சக்குப்பத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு நகரச் செயலர் ஆர்.குமரன் தலைமையில், மாவட்ட அவைத் தலைவர் கோ.ஐயப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் சேவல் ஜி.குமார், ஒன்றியச் செயலர்கள் ஆர்.பழனிசாமி, பி.வி.ஜே.முத்துக்குமாரசாமி, மாவட்ட துணைச் செயலர் முருகுமணி, மாநில மருத்துவரணி துணைச் செயலர் சீனிவாசராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.
  கடலூர் ஒன்றியம் சார்பில், காரமணிக்குப்பத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு ஒன்றியச் செயலர் ஆர்.பழனிச்சாமி மாலை அணிவித்தார். எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணைச் செயலர் அண்ணாதுரை, பேரவை பொருளர் ஆர்.வி.ஆறுமுகம், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் மணிமேகலை பழனிசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
  கடலூர் மாவட்ட வழக்குரைஞர் பிரிவு சார்பில் கடலூர் வன்னியர்பாளையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு, அரசு வழக்குரைஞர் ரவீந்திரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
  காடாம்புலியூர்: காடாம்புலியூர் பேருந்து நிலையத்தில் எம்.ஜி.ஆர். உருவப் படத்துக்கு, முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் கி.தேவநாதன் மாலை அணிவித்தார். அக்ரோ தலைவர் கருணாநிதி, கூட்டுறவு சங்க துணைத் தலைவர் சரவணன், முன்னாள் கவுன்சிலர்கள் ஏழுமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  பண்ருட்டி: பண்ருட்டி நான்கு முனைச் சந்திப்பில் எம்ஜிஆர் உருவப் படத்துக்கு, நகர்மன்ற முன்னாள் தலைவர் ம.ப.பன்னீர்செல்வம் தலைமையில், நகரச் செயலர் முருகன், அவைத் தலைவர் ராஜதுரை, முன்னாள் மேலவை உறுப்பினர் அ.ப.சிவராமன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
  திட்டக்குடி: வதிஷ்டபுரத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு, நகரச் செயலர் ஆர்.நீதிமன்னன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்தனர். பின்னர், பேரணியாகச் சென்றவர்கள் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலர் வாகை.இளங்கோவன், சிவசங்கரன், பி.எம்.முல்லைநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நகர துணைச் செயலர் பி.சத்யாசெல்வம் தலைமையில், அம்மா பேரவை இணைச் செயலர் சி.காமராஜ், முன்னாள் நகர அவைத் தலைவர் எல்.ராஜசேகர், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு இணைச் செயலர் எம்.கே.விஜயகுமார், பொருளர் தங்க.ஜெய்சங்கர் உள்ளிட்டோர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
  சிதம்பரம்: சிதம்பரம் நகர அதிமுக சார்பில், வடக்குவீதியில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்திலிருந்து நகரச் செயலர் ரா.செந்தில்குமார் தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக வண்டிகேட் பகுதியை அடைந்தனர். அங்கு எம்ஜிஆர், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
  நிகழ்ச்சியில் மா.சந்திரகாசி எம்.பி., முன்னாள் எம்.பி., பு.தா.இளங்கோவன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட பாசறை செயலர் டேங்க் ஆர்.சண்முகம், மாவட்ட வழக்குரைஞர் பிரிவுச் செயலர் சந்திரசேகரன், பால்வளத் தலைவர் சி.கே.சுரேஷ்பாபு, சிதம்பரம் வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் பா.மில்லர், தலைமைக் கழகப் பேச்சாளர் தில்லைகோபி, மாவட்டப் பிரதிநிதிகள் முத்துராமன், கே.நாகராஜன், அண்ணாமலைநகர் செயலர் முத்தையன், எம்ஜிஆர் மன்றத் தலைவர் எம்.ஜி.பாரி, நகர எம்ஜிஆர் இளைஞரணிச் செயலர் கருப்பு ராஜா, முன்னாள் நகர அவைத் தலைவர் எம்.யேசுராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai