சுடச்சுட

  

  சிதம்பரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, மூப்பனார் பேரவை, மாவட்ட மகளிர் அணி மற்றும் ஜி.கே.வாசன் நற்பணி இயக்கம் சார்பில், கட்சித் தலைவர் ஜி.கே.வாசனின் 52-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
  விழாவையொட்டி சிதம்பரம் மேலவீதியில் உள்ள சிறைமீட்ட விநாயகர் கோயில், ராமர் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டது. 52 பேருக்கு இலவச வேட்டி, சேலை, போர்வை, மரக்கன்றுகள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.
  விழாவுக்கு சிதம்பரம் நகர தமாகா தலைவர் தில்லை ஆர்.மக்கீன் தலைமை வகித்தார். மூப்பனார் பேரவை நிறுவனர் ஜெமினி எம். என்.ராதா வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் ராஜா.சம்பத்குமார், மாவட்ட தொண்டர் அணி தலைவர் கோ.குமார், மாவட்ட மகளிர் அணித் தலைவர் கே.ராஜலட்சுமி,
  ஜி.கே.வாசன் நற்பணி இயக்க நிறுவனர் எஸ். முத்துக்குமார், சிறுபான்மைப் பிரிவு செயலர் ஸ்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலர் ஏ.எஸ்.வேல்முருகன், மூப்பனார் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து 52 பேருக்கு வேட்டி, சேலை, போர்வைகளை வழங்கினார். மாநிலச் செயலர் கே.வி.எம்.எஸ் சரவணக்குமார் மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.
  மாவட்ட பொதுச் செயலர் பாபு சந்திரசேகர், நகர துணைத் தலைவர்கள் சம்பந்தமூர்த்தி, ஆறுமுகம், ஆர்.வி.சின்ராஜ், இளங்கோவன், பொதுச் செயலர் பட்டாபிராமன், முருகன், ரமேஷ், மாநில எஸ்.சி., எஸ்.டி. பிரிவு செயலர் பாலா மாவட்ட பொதுச் செயலர் பாண்டு, நகரச் செயலர் நடராஜ், இரும்பு ஆறுமுகம், மாவட்டச் செயலர் தில்லை செல்வி, சுப்புலட்சுமி, நகர மகளிர் அணி மீனா செல்வம், ஜனகம், மாலா, பூமா, மாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  முடிவில் நகரச் செயலாளர் ஆட்டோ டி.குமார் நன்றி கூறினார். முன்னதாக மகளிர் அணித் தலைவர் கே.ராஜலட்சுமி தலைமையில் சிறைமீட்ட விநாயகர் கோயிலில் சிறப்புப் பூஜை நடைபெற்றது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai