சுடச்சுட

  

  கடலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 12-ஆவது மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
  நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவர் ஆர்.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் க.சாம்பசிவம் வரவேற்றார். மாநிலச் செயலர் எம்.அன்பரசு மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயலர் என்.காசிநாதன் வேலை அறிக்கையும், பொருளர் கே.சதிஷ்குமார் வரவு-செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர்.
  ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலர் டி.புருஷோத்தமன், குடியிருப்போர் நலச் சங்க பொதுச்செயலர் எம்.மருதவாணன், சிஐடியு மாவட்டச் செயலர் பி.கருப்பையன், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கோட்டத் தலைவர் டி.மணவாளன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலர் கே.டி.சம்பந்தம், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி துணைத் தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். மாநிலத் தலைவர் ஆர்.தமிழ்ச்செல்வி நிறைவுரையாற்றினார்.
  மாநாட்டில், அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய சட்டத்தை ரத்து செய்தல், ஊதிய மாற்றத்தில் உள்ள முரண்பாடுகளை களைதல், குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு மாதாந்திர ஓய்வூதியம், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குதல், வேலைநிறுத்த உரிமையை சட்ட ரீதியான அடிப்படை உரிமையாக்குதல் கடலூர் அரசு மருத்துவ மனையில் நிறுவப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேனை உரிய அலுவலர்களுடன் பயன்படுத்த வேண்டும், கடலூர் கம்மியம்பேட்டை புனித வளனார் பள்ளியையொட்டி ரயில் நிலைய இணைப்புச் சாலை அமைத்தல் என்பன உள்ளிட்ட 49 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  மாநாட்டில், மாவட்டத் தலைவராக ஆர்.பாலசுப்ரமணியன், செயலராக எல்.அரிகிருஷ்ணன், பொருளராக டி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
  மாவட்ட இணைச் செயலர் வி.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai