சுடச்சுட

  

  தேசிய கால்பந்துப் போட்டியில் பங்கேற்ற மாணவிக்குப் பாராட்டு

  By DIN  |   Published on : 25th December 2016 05:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேசிய கால்பந்துப் போட்டியில் பங்கேற்ற மாணவிக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
  நெய்வேலி வட்டம் 11-இல் உள்ள என்எல்சி இந்தியா மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி என்.ஜாக்கியா ஆப்ரின். இவர், இந்தியப் பள்ளிகள் விளையாட்டுக் கூட்டமைப்பு சார்பில், மணிப்பூர் மாநிலம், இம்பால் நகரில் நடைபெற்ற, 17 வயதுக்குள்பட்ட மாணவியருக்கான 62-ஆவது தேசிய கால்பந்துப் போட்டியில், தமிழக அணி சார்பில் பங்கேற்று
  விளையாடினார். இந்தப் போட்டியில், தமிழக அணி 3ஆவது இடம் பெற்றது. இப்போட்டிக்கு கடலூர் மாவட்டத்தில் இருந்து தேர்வான ஒரே மாணவி ஜாக்கியா ஆப்ரின் ஆவார்.
  இதற்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக என்எல்சி இந்தியா கல்வித் துறை செயல் இயக்குநர் எஸ்.ஸ்ரீதர் பங்கேற்று பேசினார்.
  பள்ளி தலைமையாசிரியை பி.ராஜலட்சுமி மதிவாணன், உடற்கல்வி இயக்குநர் ரேவதி, ஆசிரியைகள் எம்.ஜே.லில்லி, எம்.ராஜேஸ்வரி, எம்.ஜெயசீலி, எஸ்.தேவசகாய மேரி, உடற்கல்வி ஆசிரியைகள் கே.சுமதி, ஆர்.முத்தமிழ் செல்வி ஆகியோர் பேசினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai