சுடச்சுட

  

  தந்தை பெரியாரின் 44ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினர் அவரது சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
  கடலூரில் நகர திமுக சார்பில், நகரச் செயலர் து.ராஜா தலைமையில் முன்னாள் எம்எல்ஏ இள.புகழேந்தி, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். மாவட்ட அவைத் தலைவர் து.தங்கராசு, பொருளர் வி.எஸ்.எல்.குணசேகரன், நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, சிவராஜ், வனராசு, ஜெயபாரதி, அகஸ்டின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் சிவக்குமார் தலைமையில், நகரத் தலைவர் எழிலேந்தி மாலை அணிவித்தார். நிர்வாகிகள் சின்னதுரை, அரங்க வீரமணி, சிவக்குமரன், சதீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமையில், மாவட்டச் செயலர் சா.முல்லைவேந்தன், மாநில அமைப்புச் செயலர் தி.ச.திருமார்பன், நிர்வாகிகள் பாவாணன், சக்திவேல், பால.புதியவன், ஸ்ரீதர், திருமேனி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
  மதிமுக சார்பில் மாவட்டச் செயலர் ஜெ.ராமலிங்கம் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்தனர். நிர்வாகிகள் ஜெயசங்கர், செல்வம், பிரகாஷ், குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  சிதம்பரம்: சிதம்பரம் நகர திராவிடர் கழகம் சார்பில், மேலவீதியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தி.க. மாவட்டத் தலைவர் பூ.சி.இளங்கோவன், மாவட்டச் செயலர் அன்பு சித்தார்த்தன், அமைப்பாளர் தென்னவன், நகர அமைப்பாளர் செல்வரத்தினம், மாநில பகுத்தறிவுக் கழக துணைத் தலைவர் திருமாவளவன், பெரியார் படிப்பக துணைத் தலைவர் ஆ.கலைச்செல்வன், தலைமைக் கழகப் பேச்சாளர் யாழ்திலீபன், பெரியார்தாசன், நீதிராசன், ரா.இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  அதிமுக சார்பில் நகரச் செயலர் ரா.செந்தில்குமார் தலைமையில் பெரியார் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
  கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், மேலரதவீதியில் உள்ள பெரியார் சிலைக்கு மாவட்டச் செயலர் பால.அறவாழி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். மாவட்ட துணைச் செயலர் செல்வமணி, மாவட்ட நிர்வாகி பெரு.திருவரசு, நீதிவளவன், பாவாணன், ஆதிமூலம், கிள்ளை அரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  விருத்தாசலம்: விருத்தாசலத்தில் திராவிடர் கழகத்தினர் அமைதி ஊர்வலம் நடத்தினர். மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன் தலைமையில், மாவட்டச் செயலர் முத்து.கதிரவன், மாநில இளைஞரணிச் செயலர் த.சீ.இளந்திரையன், துணைச் செயலர் ப.வெற்றிச்செல்வன், நகரத் தலைவர் நா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது, ரயில் நிலையம் சந்திப்பு, அரசு கலைக் கல்லூரி, பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
  நிகழ்ச்சியில், ஒன்றியத் தலைவர்கள் பாலமுருகன், ஆறுமுகம், நகரச் செயலர் சேகர், வேப்பூர் வட்டாரத் தலைவர் பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணித் தலைவர் சிலம்பரசன், மாவட்ட மாணவரணித் தலைவர் தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai