சுடச்சுட

    

    கடலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி, கடலூர் புனித வளனார் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
    இந்தப் போட்டியில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும், மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் 70 பேர் பங்கேற்றனர். இதில் 50மீ ஒட்டம், ஏறிபந்து, நின்று நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் 3 பிரிவுகளாக நடைபெற்றன. அனைவருக்கும் கல்வித் திட்ட உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ப.சுந்தரமூர்த்தி போட்டிகளை தொடங்கி வைத்தார். கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி, போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
    நிகழ்ச்சியில், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், ராஜசேகரன், பயிற்சியாளர் தினகரன் மற்றும் 15 சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai