சுடச்சுட

  

  குறிஞ்சிப்பாடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
  ஒன்றியச் செயலர் ச.ம.குரு தலைமை வகித்தார். நகரச் செயலர் பாலமுருகன் வரவேற்றார். கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து பேசினார். தொகுதிச் செயலர் ஜெயக்குமார், துணைச் செயலர்கள் சிற்றரசு, கோபால், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், ஒன்றிய துணைச் செயலர்கள் ஜானகிராமன், வரதராஜ், வேல்முருகன், வீரபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  கூட்டத்தில் மாவட்ட செய்தித் தொடர்பாளர் புதியவன், மாநில நிர்வாகிகள் ஜான்சன், பாஸ்கர், மாவட்ட அமைப்பாளர்கள் செல்வம், சுரேஷ்பாபு, ஒன்றியச் செயலர்கள் கோவிந்தன், சிவசக்தி, வடலூர் நகரச் செயலர் கண்ணன், நிர்வாகிகள் ராஜா, ஜெயராஜ் ஜார்ஜ் வில்லியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். டிச.28-ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் அரசியல் அமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டில் திரளாகப் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றினர். ஒன்றியப் பொருளர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார். முன்னதாக, அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai