சுடச்சுட

  

  விருத்தாசலம் அருகே மர்ம நபர்கள் வீட்டுக் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றனர்.
  மனவாளநல்லூரைச் சேர்ந்தவர் கலியன் மனைவி யோகமணி (50). அந்தப் பகுதியில் உள்ள அரசுக் குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த 2 நாள்களுக்கு முன்னர் தனது வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்குச் சென்றார்.
  இந்த நிலையில், மர்ம நபர்கள் சனிக்கிழமை அதிகாலை யோகமணியின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைச் திருடிச் சென்றனர். பின்னர், அருகில் வசிக்கும் ராமர் என்பவரது வீட்டுக் கதவை உடைத்தும் திருட முயற்சித்துள்ளனர். ஆனால், ராமர் எழுந்ததால் தப்பியோடினர்.
  சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai